ஒளியெலாம் நின்றாலும் ஓரழிவு வந்தாலும்
பாழோர் நரகமே தான்சென்று விட்டாலும்
கேட்கட்டும் நம்செவி நாதனின் நாமம்
நமச்சிவாயஞ் சொல்லட்டும் நாவு!
காண்பவை உண்மையோ காட்சிதான் மாயமோ
காண்பவன் நானேயோ நானென்ப தாரோ
உலகுதான் என்கொலோ உண்மையென் பதுள்ளதோ
அறிகிலேன் நமச்சிவா யனே!
ஆசைகள் போக அகங்காரம் நீங்கிட
வாழ்வினில் என்றும் தெளிவே நிலைத்திட
இன்பதுன்பம் தந்திடும் பாடம் அறிந்திட
தேவியைப் போற்றுவோம் நாளும்!
ஆசையே அழியுமே வேண்டுதல் வேகுமே
மேகலை போகுமே மேனியும் சாகுமே
தானென்று நின்றதே மண்ணிலே போகுமே
காலனே வந்த நாளில்.
தெளிவாய் இருந்திடு தேடி மெய் கண்டு
பணிவாய் இருந்திடு பேரொளி கண்டிடு
அன்புதான் கொண்டிரு ஆசையை நீக்கிடு
ஆனந்தம் தருமந்த வாழ்வு!
Saturday, December 12, 2009
Kaadhal venpaakkal
பார்ப்பவை யாவிலும் உன்முகம் காண்கிறேன்
கேட்பவை யாவுமே உன்குரல் ஆகுதே
புலன்கள் நிறைத்தாய் உயிரில் கலந்திட்டாய்
காதலில் நோகுதே உள்ளம்...
என் பேர் மறந்திட்டேன் ஏதும் அறிகிலேன்
உன்முகம் அல்லாது வேறொன்றும் பார்த்திலேன்
கண்ணிலே நிற்கிராய் கண்மணி நீயடி
என்னிலும் நேசித்தேன் உன்னை!
மொழியில்லை சொல்லில்லை ஓர்பொருளும் இல்லை
இருளில்லை காணவோர் ஒளியும்தான் இல்லை
பகலில்லை நித்திரைக் கோரிரவும் இல்லை
கண்ணே உனைக்கா ணாது.
(இவை மூன்றும் சில வருடங்கள் முன்பு (காதல் என்றால் என்ன என்று அனுபவிப்பதற்கும் முன்பு!!) நான் வைத்திருந்த வேறோர் வலைத்தளத்தில் எழுதியவை. எனக்குத் தெரிந்த ஒரே 'formal' தமிழ்க் கவிதை வடிவம் வெண்பா மட்டுமே, அதையும் கொலை செய்திருக்கலாம், செய்திருப்பின் மன்னித்து சுட்டிக் காட்டவும்.)

Subscribe to:
Posts (Atom)